fbpx
RETamil Newsஇந்தியா

தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் விடியோவை வெளியிட்டது சிபிஐ !!!

விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரை அடைக்கவிருக்கும் மும்பை சிறையின் வீடியோவை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ தொடர்ந்த வழக்கு லண்டன் “வெஸ்ட்மினிஸ்டர்” நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரை அடைக்கவிருக்கும் சிறையின் வீடியோவை தாக்கல் செய்யுமாறு லண்டன் நீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள  சிறைச்சாலையில் 12-ஆம் எண் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் 12-ம் எண் அறை, பிரத்யேக கழிவறை, தொலைக்காட்சி, தலையணையுடன் கூடிய படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள காட்சிகள் சுமார் 8 நிமிடம் ஓடியது. அதனுடன் பலத்த பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமிராக்களும் அந்த சிறையில் இருப்பது குறித்தும் வீடியோ காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close