தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நேற்று முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து கொண்டு வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் அக்.7-ஆம் தேதி மிக கன மழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்க்கு ‘ரெட் அலர்ட் ‘ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் , எழும்பூர் , நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர் , சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகின்றது. சில இடங்களில் பலத்த மழையும் பாய்ந்து கொண்டு வருவதால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
அதனால் , தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.