அந்த மாத்திரையை சாப்பிடும் டிரம்ப்…! ஆபத்து என அலறும் அமெரிக்கா!
Nancy warns trumps health

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என்று சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார்.
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அதிபர் டிரம்ப் உட்கொண்டு வருகிறார். ஆனால் அவரது இந்த நடவடிக்கைக்கு சபாநாயகர் நான்சி பெலோசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மிக குண்டான உடலமைப்பை கொண்ட டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அவர் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அங்கீகரிக்கப்படாத, பரிந்துரை செய்யப்படாத மருந்தை அவர் எடுக்க மாட்டார் என்று நான் விரும்புகிறேன். குறிப்பாக அவரது வயதை எட்டியவர்கள், பருத்த உடல் அமைப்பை கொண்ட அவர் குறித்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல.
2019ம் ஆண்டு டிரம்ப் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக மருத்துவக்குறிப்பு வெளியிடப்பட்டது. அவர் பருமனானவர் என்பதால் தான் நான்சி பெலோசி விமர்சித்துள்ளார்.















