‘தித்லி’ புயலால் ஒடிசா மாநிலத்தில் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் வலு பெற்று பயங்கர புயலாக மாறி ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்திலும், ஓடிசா மாநிலத்தின் கோபால்பூருக்கு அருகிலும் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை அந்த இரு பகுதிகளுக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பெரும்பாலான மரங்களும் , மின்கம்பங்களும் இடிந்து சாய்ந்து விழுந்தன. புயல் காரணமாக தொடர் மழையும் பெய்து வந்தது. அதனால் கிட்டத்தட்ட 18 மாட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த புயலாலும், மழையாலும் மாநிலத்தின் சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் வெள்ளம் சூழ்ந்த பகுதியை சேந்த சுமார் 1 1/4 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜபதி மாவட்டத்தின் பரகார கிராமத்தை சேர்ந்த சிலர் அருகில் இருந்த ஒரு குகைக்குள் பாதுகாப்பிற்க்காக தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. ஆனால் தொடர் மழை , வெள்ளம் காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த சிலர் உயிருடன் புதைந்தனர். இந்த கோர சம்பவத்தில் சுமார் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிருடன் புதைந்து உயிழந்தனர். மேலும் 4 பேரை காணவில்லை.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த புயலால் மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களுக்கு மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.