RETamil News
தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை – செங்கோட்டையன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 55 இலட்ச ரூபாய் செலவில் புதிதாக ‘காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த ஆண்டு 1,920 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 960 மாணவ மாணவியருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதமும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 மாணவ மாணவியருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும் இந்த ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.