தமிழக அரசு ஊழியர்கள் கேரளாவின் வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு !!
கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கன மழையால் மக்கள் நீங்காத துயரில் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களை துயரத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழக அரசு தங்களால் முடிந்த பல்வேறு நிதி மற்றும் பொருள் உதவிகளை செய்துவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதியாக கேரளாவிற்கு வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.
இதற்கு முன் உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வினை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’. என்று கூறப்பட்டுள்ளது.