ஜப்பானை கடும் சூறாவளி தாக்கியது ; 7 பேர் பலி ; 200 பேர் படுகாயம்.
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. இதனால் 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும் , அதனால் மிக அதிகமாக மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக பெரிய சக்திவாய்ந்த அலைகள் வீசி வருவதால் , வெள்ள மற்றும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூறாவளி நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் ஹிகோகோ தீவில் கரையை கடந்தது. பின் இந்த சூறாவளி ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்ஷுவை நோக்கி முன்னேறியுள்ளது.
வட திசையை நோக்கி இந்த சூறாவளி முன்னேறியுள்ளதால் வலு இழக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
மிக சக்திவாய்ந்த சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்ட இந்த ஜெபி சூறாவளியால் அந்நாட்டின் நூற்றுகணக்கான விமானம் , ரயில் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.