fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம் !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி பல வருடமாக வழக்கு நடந்து வருகிறது. மிக நீண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முப்பது வருடமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் அதிக வருடம் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று ஆகும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட, அரசியலமைப்புச் சட்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும், பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்த தீர்ப்பில், பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் . ஒரு புறம், பெண்கள் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள், ஆனால் மறுபுறம் கட்டுப்பாடுகள் உள்ளன. கடவுள் உறவு உயிரியல் அல்லது உடலியல் காரணிகள் மூலம் வரையறுக்க முடியாது. சபரிமலை வழிபாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். என கூறபட்டு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close