fbpx
RETamil Newsஇந்தியா

சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது நடவடிக்கை !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நடந்த போராட்டம் தொடர்பாக 1,400 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரத்தில் நடைபெற்ற பூஜையின்போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இது வன்முறையாக மாறியது. இதுதொடர்பாக 440 வழக்குகளை கேரள போலீஸார் பதிவுசெய்தனர். மேலும், நிலக்கல், பம்பா, சபரிமலை பகுதிகளில் போராட்டம் நடத்தியதாக 210 பேருக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அவர்களுடைய புகைப்படங்களை பல்வேறுமாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர்களை அடையாளம் காண்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close