திண்டுக்கல்–உணவு பாதுகாப்பு துறையினர்-அசட்டை….?
கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின் விற்பனைபடுஜோராகநடந்துவருகிறது. மசாலா பாக்கெட்கள்,சிறுவர்கள்உண்ணும்தின்பண்டங்கள், முட்டைபோன்றஉணவுப்பொருட்கள்பலமாதங்களாகவிற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்குவிற்பனைசெய்கின்றனர்.இதுகிராமப்புறத்தில்உள்ளகடைஉரிமையாளர்களின்அறியாமையும்முக்கியகாரணமாகஉள்ளது.பொருட்களை வாங்கும் சிலர் காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர்.காலாவதிதேதியைபார்க்கதெரியாதசிலமுதியவர்களும்,சிறுவர்களும் அறியாமையால் அந்த உணவுப் பொருட்களைவாங்கிபயன்படுத்துகின்றனர்.இதனால் அவர்களுக்கு உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசம் உள்ளிட்ட பல விஷயங்களை பெரிதாக காட்டுகின்றனர்.ஆனால் தயாரிப்புதேதி,காலாவதிதேதிஉள்ளிட்டவைகளை கண்ணுக்குத்தெரியாத வகையில் ஏதாவதுஒருமூலையில்பாக்கெட்களில்பிரின்ட்செய்கின்றனர்.சிலஉணவுப்பொருட்களில்காலாவதிதேதிஇல்லாமல்விற்கின்றனர். காலாவதி உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.குறிப்பாக கிராமங்களில் சிறுவர்கள் பயிலும் தொடக்கப் பள்ளிகளின் அருகே சிறிய கடைகள் அமைத்து காலாவதி பொருட்கள், கலப்பட பொருட்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது.கோதுமை மாவுகளில் மைதா , மிளகில்பப்பாளிவிதை,சிறுதானியங்களில் மண் , தின்பண்டங்களில் அதிகமான நிறமிகளைபயன்படுத்துவதுஎனஉணவுபொருளில்கலப்படம்அதிகரித்துள்ளது.உணவகங்கள், துரித உணவகங்களில் விற்பனையாகாத உணவுகளை பல நாட்கள் பிரிட்ஜ்களில் வைத்து விற்பனைசெய்கின்றனர்.இதைதடுக்கஉணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்….