கேரளா : மீண்டும் கனமழை எச்சரிக்கை கேரள மக்கள் பதற்றம் !!
கேரளா மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கேரள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2.5 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்க பட்டுள்ளனர். அதன் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் , மருத்துவ பொருட்களும் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.
100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு ;
கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் கன மழை பெய்து வருவதோடு , எல்லா அணைகளும் நிரம்பி வழிகிறது, அதனால் அணைகள் திறக்கப்பட்டதின் மூலம் கேரளா முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கின்றது. 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் வெல்ல பெருக்கு ஏற்பட்டு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஏற்பட்ட இந்த வெள்ள பெருக்கு கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இருப்பதாகவும், இதுவரை இந்த வெள்ளத்தால் 324 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், கேரளா முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை பார்வையிடுகிறார் மோடி;
நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் பங்கேற்ற பின்னர் , கேரளாவின் வெள்ள நிலைமையை பார்வையிட அங்கிருந்து கிளம்பினார், இன்று கேரள வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார்.
தொடரும் கனமழை எச்சரிக்கை ;
இந்நிலையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் காற்று 60 கி மீ வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே துயரத்தில் இருக்கும் மக்களை மேலும் துயரம் அடைய செய்யும் செய்தியாக உள்ளது.