கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதிஉதவி-நடிகர் விஜய் சேதுபதி
கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முந்தினம் மழை குறைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருவதால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் மழை வெள்ளத்தால் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 1,65,538 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,857 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 3,393 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் நிதிஉதவி செய்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ளார்.