கேரளாவுக்கு இலவச எஸ்.எம்.எஸ்.மற்றும் டேட்டா சேவை அளிக்க அனைத்து நிறுவனங்களும் முடிவு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழு, அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் மூன்றாவது முறையாகக் கூடி , கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் பற்றி ஆய்வு செய்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, இது வரை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மீட்புப்பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. 67 ஹெலிகாப்டர்கள், 24 விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மற்றும் முப்படையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 ஹெலிகாப்டர் தேவையென அமைச்சரவை செலாளர், கடற்படை, விமானப்படை மற்றும் ஓ.என்.ஜி.சி.க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை கேரளாவின் வெள்ளைமீட்பு பணியில் இன்றைக்குள் ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
கேரளாவில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றினை மேம்படுத்தும் வகையில் ஒரு செல்போன் சேவையை பயன்படுத்துவோர் மற்ற நிறுவனத்தின் டவர்களிலும் தங்கள் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது.