fbpx
RETamil News

கேரளாவில் மீட்புப்பணி தீவிரம் : தேசிய பேரிடர் மீட்பு படையின் 58 அணியினரும் களம் இறங்கினர்!!

தேசிய பேரிடர் மீட்பு படை எனும் அமைப்பு 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 58 அணிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். கேரள மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சாதனை படைத்து வருகின்றனர்.

எந்த ஒரு மாநிலத்திலும் எந்தவொரு இயற்கை பேரிடரிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் அத்தனை அணியினரும் களம் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டதில்லை. ஆனால் கேரளாவில் 55 அணிகள் களத்தில் உள்ளனர். எஞ்சிய 3 அணிகளும் கேரளாவுக்கு விரைகின்றனர். ஒவ்வொரு அணியிலும் சுமார் 40 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

கேரளாவில் இந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரின் பணி பற்றி அதன் செய்தி தொடர்பாளர் நேற்று கூறும்போது, ‘‘இதுவரை வெள்ள பாதிப்பில் இருந்து 194 பேர் எங்கள் படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். 12 விலங்குகளும் மீட்கப்பட்டன. 10 ஆயிரத்து 467 பேர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 159 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு முந்தைய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கேரளாவில் நடைபெற்று வருகிற மீட்பு, நிவாரண பணியினை இரவு, பகலாக கண்காணித்து வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close