கேரள மாநிலம் வரலாறு காணாத கனமழையினால் மிகுந்த உயிர்சேதம் மற்றும் பொருட்செதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் 19 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கேரள அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு 370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 700 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
வரலாறுகணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அணனத்து தரப்பினரும் இயன்ற உதவிகள் செய்யுமாறு, கேரள முதல் மந்திரி டிவிட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டார்.
இந்தநிலையில், கேரளாவில் வெள்ள நிலைமை குறித்து கேரளா ஆளுநர் சதாசிவமிடமும், முதல்-மந்திரி பினராயி விஜயனிடமும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். ஒட்டுமொத்த நாடும் கேரள மக்களுக்கு துணை நிற்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றன. தமிழ்நாடு சார்பில் ரூ.10 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது. கேரள மழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு திரையுலகத்தை சேர்ந்த நடிகர்–நடிகைகள் பலரும் தாராளமாக உதவி வருகிறார்கள். நடிகை அமலாபால் உடைந்த கையையும் பொருட்படுத்தாமல் கேரளவுக்கு நேரடியாகவே சென்று உதவிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.