fbpx
RETamil Newsஇந்தியா

கருப்பை மாற்று சிகிச்சை மூலம் தாயின் கருப்பையிலேயே குழந்தை பெற்ற மகள் !

மீனாட்சி என்ற இளம் பெண் குஜராத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் நடந்து நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தார். பின்னர் மூன்று முறை கருவுற்ற போதும் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ஆனால் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் இனிமேல் மருத்துவர்கள் அவருக்கு குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று கூறினர்.

இந்நிலையில் அவருடைய தாய் அவருக்கு கருப்பையை தானமாக கொடுத்தார். கடந்த மே மாதம் தான் அவருக்கு மாற்று கருப்பை அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் சற்று தேறியபிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் கருத்தரிப்பு சிகிச்சை நடந்தது.

தற்போது நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தாயும் , குழந்தையும் நல்ல ஆரோகியமாக உள்ளனர் என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close