fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

கருத்து கணிப்பு….5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு ?

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷகர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை கடந்த 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்திய பிரதேசம், மிஸோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28-ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் நவம்பர் 20-ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.பி.சி. மற்றும் சி.வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்புகள் விவரம்:

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close