RETamil News
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடியுள் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவித்துள்ளார். இவ்வாறு பாய்ந்து கொண்டிருக்கும் கனமழையால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருந்து 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.