fbpx
Others

பொறுப்பு டிஜிபி அபய்குமார்சிங் அதிரடி உத்தரவு…..

தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய்குமார் சிங் பொறுப்பேற்பு -  Sathiyam TVTN police refuse to share data on extrajudicial killings, say compiling it  affects routine workதமிழககாவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.இப்படி ஆர்டர்லியாக பணியாற்றும் காவலர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆர்டர்லிபோலீஸ்முறைஒழிக்கப்பட்டுவிட்டதாக ஆவணத்தில் இருந்தாலும், செயல்முறை அளவில் இது இல்லை. ஆர்டர்லியாக தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் போலீசார் இருப்பதாகசொல்லப்படுகிறது. ஒவ்வொரு உயர் அதிகாரியும் தங்கள் வீட்டில் ஆர்டர்லியாக 5 முதல் 20 போலீசார் வரை வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆர்டர்லி முறை என்ற ஒன்றேஇருக்கக்கூடாது,அதனைமுற்றிலும்ஒழிக்கவேண்டும்என்பதுபல்வேறுதரப்பினரும்முன்வைக்கும்கோரிக்கையாகஇருந்தது.இந்த நிலையில், தமிழகத்தில் புதிய பொறுப்பு டிஜிபியாக அண்மையில் பொறுப்பேற்ற அபய்குமார் சிங் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்பு பிரிவு தலைவர்கள் ஆகியோருக்கு அபய்குமார் சிங் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையில், காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் காவலர்களை உடனடியாக திரும்பப் பெற்று, போலீஸ் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங்கின் இந்த உத்தரவு போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close