fbpx
REஇந்தியாஉலகம்

இந்தியா இலங்கைக்கு சொந்தமான விமான நிலையத்தை ஏற்று நடத்த முடிவு

நஷ்டத்தில் இயங்கும் இலங்கை விமான நிலையம் ஒன்றை இந்தியா ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோட்டா நகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. போதிய விமான சேவை இல்லாததால் இந்த விமான நிலையம் காலியான விமான நிலையம் என அழைக்க படுகிறது.

பார்லிமென்டில் பேசிய இலங்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா இந்த விமான நிலையத்தை இந்தியா ஏற்று நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு இந்தியா மட்டுமே பதிலளித்தது என்றார்.

ஹம்பந்ததோட்டா துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்து மேம்படுத்தி வருகிறது. இதனால், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், அந்த நகரில் உள்ள விமான நிலையத்தை எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close