fbpx
RETamil News

ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!

உத்தர காண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார்.

ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக பிரதமர் மோடி கேதர்நாத் புறப்பட்டுச் சென்றார். கேதர்நாத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புகழ்பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, உள்ளூர் மக்களை சந்தித்தார்.

கேதர்நாத் சென்றதும், பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஹர்ஷில் பகுதியில் உள்ள இந்தோ-சீனா எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்டு தோறும் ராணுவ வீரர்களுடன் தீபாவளிக் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.

Related Articles

Back to top button
Close
Close