Tamil Newsஇந்தியாவிளையாட்டு
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் , அபிஷேக் வர்மாவும் தங்கம் , வெண்கலம் என்று முறையே இரு பதக்கங்கள் எடுத்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இறுதி சுற்றில் இந்த இரு இந்தியவீரர்களும் ஜப்பானின் மட்சுடாவும் மோதி கொண்டனர். அனுபவம் வாய்ந்த ஜப்பான் வீரருக்கு கடும் சவாலாக இருந்த இளம் வீரர் செளரப் கடைசி கட்டத்தில் அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடம் பெற்றார். அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.
இதனால் செளரப் செளத்ரியை ஊக்குவிக்கும் வகையில் உத்திர பிரதேச அரசு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது.