RETamil Newsதமிழ்நாடு

மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு பற்றி ஆலோசனை

நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஊரடங்கு கடைபிடித்து 36 நாட்கள் ஆன போதிலும் நாளுக்கு நாள் இதன் ஆட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதால் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் ஒரு கேள்வி குறியாக உள்ளது.

இவ்வாறு இந்த வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் , வரும் மே 2-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே , நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் , மே 2-ஆம் தேதி நடைபெறஉள்ள தமிழக அமைச்சரவை கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸின் தீவிரம் தற்போதும் தமிழகத்தில் அதிகமாவே உள்ளதால் மக்கள் ஊரடங்கை மேலும் நீடிப்பார்களா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close