fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!

வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொணியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் லால் சிங், காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும் என மிரட்டல் தொணியில் பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இப்பொழுதெல்லாம் பாஜகவினரை பார்த்தாலே பயந்து ஓடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை!!

Related Articles

Back to top button
Close
Close