RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றவர் அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று டிடிவி தினகரன் தெளிவாக குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி தங்கள் கூட்டணியை அணுகினால் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.