fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்…! பல்கலை. மானியக்குழு அனுமதி!

UGC allowed dual degree

டெல்லி:

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலைக் கழகத்தில், அல்லது வேறொரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரியை  மாணவர்கள் படிக்கலாம்.

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் இந்த நடைமுறை 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யுஜிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

அந்த வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 3 ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு இரு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close