RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகுமென வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.