RETamil Newsதமிழ்நாடு
அதிமுக அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் குறைகூற முடியவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் கூட குறைகூற முடியவில்லை என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை காளவாசலில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழக அரசு கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு அளித்து வருவதாக குறிப்பிட்ட செல்லூர் ராஜு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் குறைகூற முடியவில்லை என்றும் வெறும் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு மீண்டும் சட்டசபைக்கு வந்து விடுவார் எனவும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் உள்ளவர் குடிமகன் என்றும் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.