அணு ஆயுத சோதனை மையத்தை அகற்றுகிறது வட கொரியா!!!
வாஷிங்டன்
வட கொரியா தனது அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற முடிவு செய்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
அதை ஒட்டி வடகொரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள புங்பேரி பகுதியில் உள்ள அணு ஆயுத பரிசோதனை மையத்தையும் ரகசிய சுரங்கங்களையும் அகற்ற வட கொரிய அரசு முடிவெடுத்துள்ளது.
அத்துடன் அனைத்து அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்களையும் பாதுகாப்புச் சாவடிகளையும் முற்றிலுமாக அகற்றப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நானும் வட கொரிய அதிபரும் சந்திப்பதற்கு முன்னரே அணுகுண்டு சோதனை மையத்தை அகற்றுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
இதனால் நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார் .