fbpx
RETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!

Stalin tweet about manmohan health

சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் நெஞ்சுவலியால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

அவர் தமது  ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன். நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்போதைய தருணங்களில் அவரது சேவைகள் இந்தியாவிற்கு அவசியம். எனவே அவர் பூரண நலத்துடன் விரைவில் திரும்புவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close