fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா வைரசை அதிமுக அரசா உருவாக்கியது..? ஸ்டாலினுக்கு பதிலடி தரும் அமைச்சர்!

Minister rajendra balaji condemns DMK Leader stalin

சென்னை:

கொரோனா வைரஸை அதிமுக அரசா உருவாக்கியது என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளன. சென்னையில் 40 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தமிழக அரசின் செயல்பாடுகள் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இல்லை, மெத்தனம் காணப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.

அவரது இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

கொரோனா வைரஸை அதிமுக அரசா உருவாக்கியது? ஸ்டாலின் அதிமுக அரசு கொரோனாவை பரப்புவது போல பேசுகிறார். அதிமுக அரசும், அமைச்சர்களும் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close