GeneralRE

பிரபல நடிகர் இர்ஃபான் கான் மரணம்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது!

மும்மை:

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 53.

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் நேற்று திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இர்ஃபான் கான்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் இர்ஃபான் கான். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இர்ஃபான் கான் உயிரிழந்த தகவலை இயக்குநர் ஷுஜித் சிர்கார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இர்ஃபான் கான் மரண செய்தியை கேட்டு திரைதுறையினரும் ரசிகர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close