RETamil Newsஅரசியல்
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை : வடதமிழகம் மற்றும் சென்னையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் மேற்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக வட மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் சென்னையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.