பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி 2 குழந்தைகள் கொடூரமாக கொலை
பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணற வைத்து இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் தாயின் உடலும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரை டிவிஎஸ் நகரை ஒட்டிய சத்யசாய் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா மனைவி மைக்கேல் ஜீவா குழந்தைகள் ஹரிதா,கிஷோர்குமார் உடன் வசித்து வந்தார்.
மனைவி மீது சந்தேகம் கொண்ட ராஜா அவரோடு அடிக்கடி தகராறு செய்வார் என சொல்லப்படுகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு அவர் சந்தைக்கு சுமைதூக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை வீடு திரும்பியபோது குழந்தைகள் இருவரின் முகத்திலும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர் மனைவி மைக்கேல் ஜீவாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து ராஜா அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற சுப்பிரமணியபுரம் போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கிட்டு கொண்டாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.