கர்நாடகாவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு?!!;உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!!

டெல்லி: பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அமர்வு பாஜக தரப்பிற்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்கெடுப்பு நடத்த கூடுதல் நேரம் அளிக்க முடியாது. ஒருவேளை நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாங்கள் உத்தரவிடலாம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கர்நாடக டிஜிபி-க்கு உத்தரவிடுவோம் என கூறியுள்ளனர்.

எனவே கர்நாடக சட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை நடைபெற வாய்ப்பு ஏற்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.