RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார்.
தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே தற்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.