ராணிப்பேட்டை–இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்..

திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
இரட்டைவேடம்போட்டுநாடகமாடுகிறதுராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்இந்திய குடியரசு கட்சியின்மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் அக்கட்சியினுடைய மாநில தலைவர் செ.கு. தமிழரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போதுகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமம் தலித் குடியிருப்பு பகுதியில் சில சமூக விரோதிகள் நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து விட்டனர் இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டனர் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தைக் கலந்த குற்றவாளி யார்? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்தது அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்ட விசாரணை முடக்கி விடப்பட்டது இப்படி படிப்படியாக நடந்த விசாரணைகளின் அடிப்படையில் 397 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 200 பொது மக்களின் மலம், ரத்தம், சிறுநீர் மற்றும் சட்டத்தை மீறி பள்ளி சிறுவர்கள் மலம் சிறுநீர் ரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதன் பிறகு இரண்டு வருடம் இரண்டு மாதத்திற்கு பிறகு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மலம் கலந்ததாக யார்? பார்த்துச் சொன்னார்களோ? அவர்கள் தான் குற்றவாளிகள் அரசும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் அறிக்கை சமர்ப்பிக்கிறது நீதிமன்ற ஆணையம் நடத்திய விசாரணை எங்கே? சிபிசிஐடி நடத்திய விசாரணை என்னானது?என்ன நடக்குமோ? அது நன்றாகவே நடந்தது என்பது போலவே அதே குடியிருப்பு சேர்ந்தவர்களே! அவர்களாகவே தண்ணீரில் மலத்தை கலந்து கொண்டார்கள் யாருக்கோ கையாளாக, அடியாட்களாக இருந்து வேலை செய்து இருக்கிறார்கள் என்கின்றனர் திமுக அரசு ஏன் குற்றவாளிகளை இதுவரையிலும் கைது செய்யவில்லை தற்போது சொல்லும் குற்றவாளிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளை திமுக அரசு கண்டுபிடிப்பதற்கு தவறிவிட்டது யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது என்ற கேள்வியை முன்வைத்தார்வழக்கமாக திமுக அரசு தலித் மக்களுக்கு விரோதமாகத்தான் செயல்பட்டு வருகிறது வெண்மணி என்ற இடத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர்குடிசையோடு எரித்து கொன்றனர் குடிசையில் அருகாமையில் இருந்த இரு மரங்களும் எரிந்தது என்ன? செய்தது திமுக அரசு அதே ஊரைச் சேர்ந்த நிலக்கிழார் அதிக நிலம் வைத்திருக்கிறார் காரும் வைத்திருக்கிறார் அவரும் அவருடைய அடியாட்களும் எரித்தார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, சாட்சியமும் இல்லை எனவே இவரை விடுதலை செய்கிறோம் என்று தீர்ப்புவழங்கியதுதிமுகஅரசுஆட்சியில்பலஇடங்களில்தலித்மக்கள்இழிவுபடுத்தப்பட்டார்கள்கற்பழிக்கப்பட்டனர் ஆணவ கொலைகள் நடைபெற்றது இதனை தடுப்பதற்கு இது இதுவரையில் திமுக அரசு கடுமையான எடுத்ததாக சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்தலித் மக்களின் உடைமைகளை, உரிமைகளை பாதுகாப்பதற்கு அக்கரை இல்லை இரட்டை வேடம் போடுகிறது திமுக அரசு இந்திய குடியரசு கட்சி வேண்டுகோள் என்னவென்றால் வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் வேண்டாம், சி பி சி ஐ டி விசாரணையும் வேண்டாம், தற்போது பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்தற்போது ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அமைச்சர்களும் முதலமைச்சரும் அங்கு பெரும்பான்மையாக உள்ள அருந்ததி மக்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை குறித்து பேசுகிறார்கள் பட்டியல் இனமக்களின்ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள் ஒதுக்கீடு செய்து நாடகம் ஆடினீர்கள்தொடர்ந்து அதே நாடகத்தை அரங்கேற்று வருகிறீர்கள்திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களின் ஒட்டுமொத்த உள் ஒதுக்கீடு சலுகைகள் பதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று சொன்னீர்கள் நான்காண்டு காலம் முடியப்போகிறது இதுவரையில் வெள்ளரிக்கையை ஏன்?வெளியிடவில்லைபரமக்குடி துப்பாக்கி சூட்டில்சம்பத் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டபோதுதென் மாவட்டங்களில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைக்கு முக்கியமான காரணம் ஜல்லிக்கட்டு தான் என்று அறிக்கையை சமர்ப்பித்தனர் யார்? மாடு விடுவது உயர் சாதிக்காரரனா? தாழ்ந்த சாதிக்காரனா? மாடு விடுவதிலும் ரிசர்வேஷன் உண்டா? இதனை ஊக்குவிப்பது யார்? கடந்த ஏழு ஆண்டுகாலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு காளை போட்டியில் 10-லிருந்து15 பேர் இறந்திருக்கின்றனர்சம்பத் ஆணையை முறைப்படுத்த வேண்டும்விழுப்புரம் மேல் பாதி கோயில் இழுத்து மூடியது ஏன்? கோவிலில் கடவுளை வணங்குவதை விட அந்த கோவிலுக்கு செல்வதற்கு தலித் மக்களுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? குளத்தில் தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கு உரிமை இருக்கிறதா?இல்லையா? அம்பேத்கரும் அதை தான் கேட்டார் நாங்களும் அதை தான் கேட்கிறோம் இதற்குண்டான தீர்வைதான் செய்ய வேண்டும் ஆனால் சாதியவாதிகளுக்கு பணிந்து போகிறது அரசுஅனைத்து அம்பேத்கர் அமைப்புகளும் இணைந்து வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தி தரக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாட்டுக்கறி சாப்பிடுவதைக் குறித்து மத்திய பிஜேபிஅரசு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது யார்?எந்த கறி சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பது அவரவர்களின் உரிமை புராணங்களில் யாகத்திற்கு குதிரை கறி பயன்படுத்தப்பட்டுள்ளது, மாட்டுக்கறி குறித்தும் புராணங்களில் கூறப்பட்டுள்ளதுகோமாதா தெய்வமாக வணங்குகிற நீங்கள்இந்தியாவில் ஓராண்டுக்கு 24 ஆயிரம் கோடிமாட்டுஇறைச்சிவெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யப்படுகிறதுஇதனை ஏன்? தடுத்து நிறுத்தவில்லைபாட புத்தகங்களில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சேர்க்க பலமுறை கோரிக்கை வைத்தோம்இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டத்தை எழுதிய பாபாசாகேப் அம்பேத்கர் தமிழகம் முழுவதும் சிறை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார் அம்பேத்கரின் சிலைக்கு மாலை போடுவதாக இருந்தாலும் கூட பெரும்பாலும் காவல் நிலையங்களில் தான் சாவி வாங்க வேண்டியிருக்கிறது சிறை கூண்டை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம் நாடாளு மன்றத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டம் விவாதத்தில் அமித்ஷா, அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வதை விட கடவுளே! கடவுளே! என்று சொல்லி இருந்தால் மோட்சத்துக்கு போகலாம் என்றார்அமிட்ஷாவுக்கு சொல்வது ஒன்றே! ஒன்றுதான் ஆயிரம் கடவுள்கள் அவதாரம் எடுத்து வந்தாலும் அம்பேத்கரின் புகழை அழிக்க முடியாது மேலும் அவர் பேசிய போது அதிமுகவுடன் கூட்டணி தொடரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு போட்டியிடுவதற்கான சீட்டு கேட்கப்படும் என்று பல்வேறு கருத்துகளை பேசினார்…