RETamil Newsதமிழ்நாடு
சிபிஐக்கு மாற்றப்பட்டது , அனைத்து சிலை கடத்தல் வழக்குகள் !
சிலைக்கடத்தல் தொடா்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், இது தொடா்பாக விசாரணை நடத்தவும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சிலைக் கடத்தல் தொடா்பான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞா், சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தமிழக அரசு சாா்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொிவித்தாா்.
இந்த அரசாணை முடிவிற்கு தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பெரும் கண்டனம் தொிவித்துள்ளாா்.