அதிமுகவில் அதிரடி மாற்றம் ; ஓபிஸ், இபிஸ் அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதவி நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதுடன் திருநெல்வேலி மாநகர மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதவி நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்சியின் நிர்வாக வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு , மேற்கு என்று இரண்டு தொகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக அசோகனுக்கு , மேற்கு மாவட்ட செயலாளராக ஜான் தங்கமும் நியமிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.