RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மூளை சாவை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பலி கேரளாவில் அதிர்ச்சி !!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள்.

பின் உடல்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது.

இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் கேரளாவை தவிர வேறு எந்த மாநிலத்திலும்  பாதிப்பு ஏற்ப்பட்டதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை.

Related Articles

Back to top button
Close
Close