fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா…! ஒரே நாளில் 17000 பேருக்கு பாதிப்பு!

India corona status crosses 17000 in one day

டெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,922 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு.

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை 1,86,514. கடந்த 24 மணி நேரத்தில் நாடு 418 இறப்புகள் பதிவாகி உள்ளன.

மொத்த இறப்பு எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,739 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் 70,390, தமிழகத்தில் 67,468, குஜராத்தில் 28,943, ராஜஸ்தானில் 16,009, மத்திய பிரதேசத்தில் 12,448 பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 19,557, ஆந்திராவில் 10,331, தெலங்கானாவில் 10,444, கர்நாடகாவில் 10,118, கேரளாவில் 3,603, புதுச்சேரியில் 461 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close