fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியாஉலகம்தமிழ்நாடு

குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணம்: சவுதி அரேபியா தகவல்!

Saudi Arabia about Hajj traval

துபாய்:

குறைந்த எண்ணிக்கையில் நடப்பாண்டில் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

வயதானவர்களுக்கு தடை,  கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சவுதி அரேபியா கூறி உள்ளது.

சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மார்ச்சில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கும் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து நாடுகளில் இருந்து  குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் பயணிகளுடன் நடைபெறும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் மட்டுமே வசிப்பவர்கள், ஹஜ் செய்ய தயாராக உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close