

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகள் வெகு நாட்கள் கழித்து திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக் குறியாகியது. சமூக இடைவெளி,மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.
இதனை எதிர்க்கும் விதமாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது.
நேற்று முன்தினம் மட்டும் சுமார் 63 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடியை எட்டியது.















