எஸ்.பி.ஐ வங்கியின் அலட்சியம் 12லட்சத்தை எலியிடம் பறிகொடுத்த பரிதாபம்!!!
கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் எலி கடித்துக் குதறி நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் 12 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
இந்த ஏடி.எம் இயந்திரம் பழுதானதால், அதிலிருந்த பணம் அதனுள்ளேயே இருந்துள்ளது. மேலும் இந்த இயந்திரம் சீர் செய்யப்படாமல் பல மாதங்களாக அப்படியே இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஏடி.எம்.மை சீர் செய்ய அதிகாரிகள் மெஷினை திறந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. ஏனென்றால் அதிலிருந்த பணம் அனைத்தையும் எலி கடித்து குதறி நாசமாக்கி இருந்தது.
மொத்தம் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை எலி கடித்து குதறி நாசமாக்கியுள்ளது. எலி மீது எப்படி புகார் கொடுப்பது என்று வங்கி அதிகாரிகள் செய்வதறியாது குழம்பிப் போயுள்ளனர்.