fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% வெட்டா…? அதிர்ச்சி தகவல்

No salary deduction for central govt employees

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் அதிர வைத்துள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு இந்த மாதம் 17ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது அத்யாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொழில்கள் முடக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பெரும்பாலான மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், வருவாய் இழப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்பட இருப்பதாக  செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது பெரும் விவாத பொருளாக மாறி போனது.

ஆனால், இந்தத்  தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. ஆகவே இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close