fbpx
Others

பிரியங்கா–அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தீவிர பிரச்சாரம்..

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடுகிறது.இருப்பினும், சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே என முக்கியத் தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுகூட நடைபெறவில்லை.இந்நிலையில் காங்கிரஸின் 17 தொகுதிகளில் அமேதி மற்றும் ரேபரேலியில் எப்படியும் வெற்றிபெற அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019 தேர்தலில் அமேதி.கைவிட்டுப் போனது. அமேதியில் அரசியல் தொடங்கி கடந்த 2004முதல்வெற்றிபெற்று  வந்த ராகுல் காந்தியை கடந்த 2019-ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானிதோற்கடித்தார்.ராகுல் தற்போது எம்.பி.யாக உள்ள கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இத்துடன், கடைசி நேரத்தில் அவர் ரேபரேலியிலும் மனு தாக்கல் செய்துள்ளார். ரேபரேலியில் சோனியா காந்தி கடந்த 2004 முதல் எம்.பி.யாகஇருந்தார்.தேர்தலில்அவர்தனதுஉடல்நிலையை காரணம் காட்டி மாநிலங்களவை எம்.பி.யாகி விட்டார். எனவே, நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல் அங்கு புதிதாகக் களம்இறங்கியுள்ளார். அமேதியில் நேரு-காந்திகுடும்பத்திற்கு நெருக்கமானவரான கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். இவர் 1984 முதல் அமேதியில் காங்கிரஸுக்காக தேர்தல் பொறுப்புகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அமேதி, ரேபரேலியிலும் வெற்றி பெறுவது காங்கிரஸுக்கு சவாலாகிவிட்டது.எனவே இவ்விரு தொகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இவற்றின் பிரச்சாரப் பொறுப்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவிடம் அளிக்கப்பட்டுள்ளது. 5-ம் கட்ட தேர்தல் மே 18-ல்நடைபெறும் நிலையில்இங்கு கடைசி நாள் வரை பிரியங்கா தீவிரப் பிரச்சாரம் செய்கிறார்.பிரியங்காவுக்கு உதவ, முன்னாள் முதல்வர்களான அசோக் கெலாட், பூபேஷ் பாகேல்ஆகியோரைகட்சியின்தேர்தல்பார்வையாளர்களாககட்சியின்தலைவர்மல்லிகார்ஜுனகார்கே நியமித்துள்ளார்.சோனியாகாந்தி தனது மேற்பார்வையில் ரேபரேலியில் 24 பேர் கொண்ட ஒரு குழுவையும் அமேதியில் 40 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார். இவ்விரு குழுக்களும் பிரியங்காவுக்கு பிரச்சாரத்தில் உதவ உள்ளன..

Related Articles

Back to top button
Close
Close