விஜய் நிர்வாகிகளுக்கு அனுப்பிய மேஜர் உத்தரவு…..?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை த.வெ.க. தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.இதற்காக முக்கியமான சில உத்தரவுகளை கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். வருகிற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், அதேபோல அடுத்த வாரத்திலும் நடக்கவிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மிகவும் கவனமுடனும் உன்னிப்பாகவும் கவனித்து சில நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அளவிலான தங்களின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது அக்கட்சிகளின் தலைமை.இந்த நிலையில், இதே திருத்தப்பணிகளை த.வெ.க. தலைவர் விஜய்யும் உன்னிப்பாக கவனித்துள்ளார். இதுகுறித்து, மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கிராமம் தொடங்கி நகரம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தநம்கட்சியினருக்குஅறிவுறுத்தவேண்டும்எனநிர்வாகிகள்கூறியிருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொண்ட விஜய், இது குறித்து ஒரு கடிதத்தை நம் கட்சியினருக்கு நீங்கள் அனுப்பி வைத்துவிடுங்கள் என்று புஸ்ஷி ஆனந்திடம் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆலோசனை நடந்த போது, ”நம் தொண்டர்கள் அனைவரும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரிபார்க்கச் சொல்லுங்கள்.எனக்கு கிடைத்த தகவலின் படி, நம் கட்சியினரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட ஆளும் கட்சி திட்டமிடுவதாக தெரிகிறது. அதனால், பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்துங்கள். அடுத்து, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களில் யாரெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை பெறாமல் இருக்கிறார்களோ அவர்களை இந்த திருத்தப் பணிகளை பயன்படுத்திக்கொள்ள அட்வைஸ் பண்ணுங்கள் ” என மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் விஜய்.மாவட்ட கட்டமைப்பை ஆய்வு செய்து அறிக்கை அளியுங்கள் என பொதுச்செயலாளர் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதற்காக மாவட்ட அளவிற்கு நிர்வாகிகள் சோதனை செய்யப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் தள் ஆய்வுப் பணியை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டத்தில் கட்சி நிலை.. அதில் உள்ள நிர்வாகிகள்.. நிறை குறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.இதற்காக ஆக்சன் படை ஒன்றை உருவாக்கவும். நேரடியாக சென்று ஆய்வு பணிகளை செய்யுங்கள். முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை கண்காணியுங்கள். மாநிலம் முழுக்கஎல்லாஏரியாவிற்கும்செல்லுங்கள்என்றுவிஜய்உத்தரவுபிறப்பித்துஉள்ளாராம்.த.வெ.க.வின் தலைமையில் எடுக்கும் முடிவுகள், அரங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விபரங்கள் திமுக தலைமைக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. மாநில உளவுத்துறைதான் இந்த ரிப்போர்ட்டை முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது. ஆக, கட்சியின் ரகசிய முடிவுகள், விவாதிக்கப்படும் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படி செல்கிறது? என்கிற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறதாம். ஏனெனில், சமீபத்தில், விஜய் மற்றும் முக்கிய நபர்கள் 3 பேர் மட்டுமே இருக்கும் ஒரு சந்திப்பில் பேசப்பட்ட தகவல், அந்த சந்திப்பு முடிந்த அடுத்த 2 மணி நேரத்தில் திமுகவில் இருக்கும் விஜய்யின் நண்பர் ஒருவர், விஜய்யிடம் இது குறித்து கேட்டபோதுதான் விஜய் அதிர்ச்சியடைந் திருக்கிறார்.
அதனால்தான், ரகசிய தகவல்கள் லீக் ஆகிறது என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதாம். அந்த சந்திப்பில் அப்படியொன்றும் வெளியே தெரியக் கூடாதா விசயங்கள் இல்லை. ஆனால், இந்த விசயங்களே வெளியே போகிறதென்றால், மிக சீக்ரெட்டான விசயங்களும் வெளியே போகத்தானே செய்யும் ? என்கிற கேள்வி விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாம்.