fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

இது எந்த ஊரு பஸ்சுன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்…! வைரல் போட்டோ…!

APSRTC mulls 26-seater buses post COVID-19 lockdown

ஐதராபாத்: ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்கியது.

தமிழகத்திலும் ஊரடங்கிற்கு பின்னர் போக்குவரத்து துவங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான ஆந்திராவிலும் போக்குவரத்துக் கழகம் சார்பிலும் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

இந் நிலையில் முதற்கட்டமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. பேருந்தில் மூன்று வரிசைகள் கொண்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பயணிகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும். தொலை தூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close