GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ஜார்க்கண்டில் ஒரு குடும்பத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலி..! கிராமமே ஷாக்!
6 members in family dead due to corona, Jharkhand

ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயதான ஒரு பெண், அவருடைய ஐந்து மகன்களும் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமணத்திற்கு 88 வயது பெண் சென்று வந்துள்ளார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதலில் மரணம் அடைந்ததாக தெரிகிறது.
அதன்பின்னர் அந்த பெண்மணியின் 5 மகன்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்த ஒருசில நாட்களில் ஐந்து மகன்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அந்த கிராமம் முழுவதையும் சீல் வைத்துள்ளனர். சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து, கிராம மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
















