fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை நீட்டித்து அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் மார்க்கெட், கடைகள் என பல இடங்களில் சமூக இடைவெளியின்றி வெளியே செல்வதுமே இதற்க்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, கோயம்பத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கானது கடந்த 26.4.20 அன்று காலை 6 மணி முதல் 29.4.20 இன்றிரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அமலானது இன்றிரவு முடிவடைய இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி , சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அதனால் மக்கள் அவசரமின்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின்னர் மே 1-ம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close